இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். அதில் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்த சூழலில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தின் முதலமைச்சரானார்.

மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வந்ததாக கூறப்பட்டது. மகாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சி உடைந்தது. அந்த கட்சியின் கிட்டத்தட்ட 3/4 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். அப்போது பேசிய அவர், “அஜித் பவாரின் செயலை கட்சி அங்கீகரிக்கவில்லை என்றும் அது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் கூறினார். சில என்சிபி நண்பர்கள் இப்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதால், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பிரதமர் மோடி அவர்களை விடுவித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று சரத் பவார் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று என்ன நடந்தது என்று கவலைப்படவில்லை. மம்தா பானர்ஜி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். என்சிபி மீது யாராவது உரிமை கொண்டாடினால் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் மக்களிடம் சென்று அவர்களின் ஆதரவை பெறுவோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்

நாளை, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஒய்.பி.சவானின் ஆசிர்வாதம் பெற்று பொதுக்கூட்டம் நடத்துவேன்" என்று சரத் பவார் கூறினார். எனது வீடு பிரிந்தது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்த பிரச்சினை எனது வீட்டைப் பற்றியது அல்ல, இது மக்களின் பிரச்சினை. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு, அவர் அறிக்கைகளை வெளியிட்டார். அந்த அறிக்கைக்குப் பிறகு, சிலர் சங்கடமாக உணரத் தொடங்கினர். அவர்களில் சிலர் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர்”என்று சரத் பவார் கூறினார்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களது கட்சியை பற்றி பிரதமர் கூறியிருந்தார். நீர்ப்பாசன புகார்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் குறிப்பிட்டார். எனது கட்சியை சேந்த நண்பர்கள் சிலர் சத்தியப்பிரமாணம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதிலிருந்து அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விடுவிக்கப்பட்டுவிட்டன என்பது தெளிவாகிறது. அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சரத் பவார் கூறினார்.

அம்மா உணவகம்: ஏழை மக்கள் 3 வேலை சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கலையா.? திமுகவை வெளுக்கும் இபிஎஸ்

PM Modi : பாஜக மிஷன் 2024.! முஸ்லீம் ஓட்டுக்களை தட்டி தூக்கிய மோடி.. அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?