பெங்களூரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கும் boAt!

இந்தப் பயிற்சி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அடிப்படை கணினி செயல்பாடுகள், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மென்பொருள் பயன்பாடுகள் போன்றவை குறித்து அறிந்துகொள்வார்கள்.

NBF inaugurated the computer training facility sponsored by boAt in Govt. school Ramamurthy nagar sgb

இந்தியாவின் முன்னணி மின்சாத தயாரிப்பு நிறுவனமான boAt அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் பரிச்சயம் ஏற்படுத்த பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

பெங்களூருவில் இயங்கிவரும் நம்ம பெங்களூரு அறக்கட்டளையுடன் இணைந்து அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அத்தியாவசிய கணினி திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அடிப்படை கணினி செயல்பாடுகள், டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மென்பொருள் பயன்பாடுகள் போன்றவை குறித்து அறிந்துகொள்வார்கள்.

சீனாவுக்கு உளவு பார்ப்பதாகப் பிடிபட்ட புறா 8 மாதங்களுக்குப் பின் விடுதலை!

இந்தத் திட்டம் குறித்துக் கூறும் boAt நிறுவனத்தின் இணை நிறுவனர் சமீர் மேத்தா "வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மாற்றுவதற்கும் தொழில்நுட்பத்தின் சக்தி தேவை என்று நாங்கள் நம்புகிறோம்," என்கிறார்.

"நம்ம பெங்களூரு அறக்கட்டளையுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுவதன் மூலம், மாணவர்களிடையே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவில் காணப்படும் பாகுபாட்டைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான கணினித் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தத் திட்டம் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனவும் சமீர் மேத்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நம்ம பெங்களூரு அறக்கட்டளையின் அறங்காவலர் சஞ்சய் பிரபு கூறுகையில், "இந்த முயற்சியில் போட் (boAt) உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைத்து அரசுப் பள்ளி மாணவர்களை மேம்படுத்துவதில் கணினி வகுப்புகள் முக்கிய பங்கு வகிக்கும். இன்றைய டிஜிட்டல் உலகில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவை உருவாக்குவதற்கு இது முக்கியமானது என்று கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாசம் மொபைல் யூஸ் பண்ணாம இருந்தா ரூ.8 லட்சம் பரிசு! நீங்க ரெடியா? சவால் விடும் சிக்கி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios