Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்வில் அவமானப்படுத்தப்பட்ட தேசியகீதம்; வைரல் வீடியோ!!

தேசிய கீதம் இசைக்கப்படும்போது, இந்தியர்கள் யாராக இருந்தாலும் மரியாதையுடன் எழுந்து நின்று இணைந்து பாடுவார்கள். ஆனால், மே 30 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட நிகழ்வில் இது நடக்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

National anthem disrespected at Rahul Gandhi's US event; viral video
Author
First Published Jun 1, 2023, 2:26 PM IST

ஆளும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களால் பகிரப்பட்டு வரும் வீடியோ, தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த இடத்தில் குழந்தைகள் குழு தேசிய கீதம் பாடுவதைக் காட்டுகிறது. மைக் சோதனை நடப்பது அரங்கில் இருந்த மக்களுக்குத் தெரியவில்லை.

தேசிய கீதம் பாடப்படும்போது குறுக்கிடுவது அவமரியாதைக்குரியது என்றாலும், தேசிய கீதம் பாடும்போது பார்வையாளர்களில் பெரும்பாலோர் அமர்ந்து அல்லது அரங்கம் முழுவதும் அமர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

''அமெரிக்காவில் இருக்கும் பாகிஸ்தானியர்களையும், வங்கதேசியர்கள் முன்பும் ராகுல் காந்தி பேசினார். அந்தப் பகுதியில் இந்தியர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் அந்த ஹால் முழுவதும் காலியாக இருந்தது'' என்று பாஜக தலைவர்களில் ஒருவரான அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் கருதிய மற்றொரு தலைவரான ஷெசாத் பூனாவாலா, ''ராகுல் காந்தி பேசுவதற்கு முன்பு அங்கிருந்தவர்களில் பாதிப்பேர் கூட எழுந்து நிற்கவில்லை. அதற்கு அவர்கள் கவலைப்படவும் இல்லை. பின்னர் தேசிய கீதத்தை நடுவில் நிறுத்தினர். அதற்கு 'மைக் செக்' செய்வதற்கு தேசிய கீதம் நிறுத்தப்பட்டது என்று விளக்கம் அளித்தனர். இந்த அவமரியாதை எதற்காக செய்யப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு ராகுல் காந்தியின் ஏற்பாட்டுக் குழுவினருக்கு உள்ளது? தேசிய கீதத்தை அவமதிக்கும் பார்வையாளர்கள் யார்? ராகுலின் மைக் சோதனைக்கு கீதம் பயன்படுத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விழா ஏற்பாட்டாளர் விஜய் தோட்டாதில் விளக்கம் அளித்துள்ளார். தேசிய கீதம் பாடும்போது அனைவரும் எழுந்து நின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios