ஆந்திராவில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தில் திடீரென தீப்பிடித்து ஏற்பட்டது. இதனையடுத்து பேருந்தில் இருந்த 32 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, 32 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை உடனடியாக கீழே இறங்கினர். பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிய சில நிமிடங்களிலேயே தீ மளமளவென முற்றிலுமாக பரவியது. 

இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் பயணிகளின் உடைமைகளும், பேருந்தும் முற்றிலுமாக கருகியது. இந்த தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.