தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 20ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இருள் நீங்கி ஒலி பிறக்கும் இந்த நல்ல நாளில் மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பரிமாறி மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த வரிசையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் வீடுகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டும், பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் தீபாவளியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்தனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத்தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, அடுத்ததாக சிபி ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் வந்து அவரது வீட்டில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடிக்கு நெற்றியில் திலகம் இட்டு பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
