முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது வக்கீல் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். பின்னர், அவர் கூறியதாவது:

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நளினி எழுதிய ‘ராஜிவ்காந்தி கொலையும், பிரியங்கா சந்திப்பும்’ என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் சென்னை, டெல்லி, லண்டன் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.