நாகாலாந்து முதல்வராக நெய்பியு ரியோ, மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நாகாலாந்து மாநிலத்தில் 60 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடந்து முடிந்தது. கூட்டணியில் பா.ஜ.க. 12 இடங்களிலும், என்.டி.பி.பி. 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 30 இடங்களே போதும் என்ற நிலையில் கூட்டணியில் அதற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர்.
கூட்டணி கட்சிகளின் சார்பில் என்.டி.பி.பி. கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ இன்று ஐந்தாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கோஹிமாவில் நடந்த எளிய விழாவில் நாகாலாந்து ஆளுநர் எல். கணேசன் ரியோவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை முதல்வராக தடியு ரங்கவ் பதவியேற்றுக் கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் படித்து தங்கப் பதக்கம் வென்று தலிபான்களுக்கு சவுக்கடி கொடுத்த இளம்பெண்!!
நாலாலாந்து மாநிலத்தின் கடந்த 60 ஆண்டுகால அரசியலில் ஒரு பெண் கூட எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்யப்பட்டது கிடையாது. முதன் முறையாக ஆளும் என்டிபிபி கட்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ளனர்.

மேகாலயா:
மேகாலயா முதல்வராக இரண்டாவது முறையா கான்ராட் கே சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக, ஷில்லாங்கில் இருக்கும் ராஜ் பவனில் இன்று முதல்வர் கான்ராட் கே சங்க்மாவுக்கு ஆளுநர் பாகு சவ்கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சங்மாவின் என்பிபி கட்சியைச் சேர்ந்த பிரெஸ்டோன் டிசாங் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்களது பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஆகியோர் பங்கேற்றுக் கொண்டனர்.
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 60 இடங்களில் சங்மாவின் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் பாஜக மற்றும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். தற்போது சங்மா தலைமையிலான கூட்டணியில் 45 எம்.எம்.ஏ.,க்கள் உள்ளனர்.
கூட்டணியில் என்பிபி சார்பில் எட்டு அமைச்சர்களும், ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி சார்பில் இரண்டு அமைச்சர்களும், பாஜக சார்பில் ஒரு அமைச்சரும் பதவியேற்றுக் கொண்டனர். தெற்கு டியுரா தொகுதியில் இருந்து 5,106 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை சங்மா தோற்கடித்தார். யுடிஎப் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
