Nagaland Exit Poll Results 2023: நாகாலாந்து தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்

நாகாலந்து மாநிலத்தின் 59 தொகுதிகளில் நடைபெற்ற 2023 சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருதக்கணிப்பு முடிவுகள் விவரம் வெளியாகியுள்ளது.

Nagaland Assembly Elections Exit Poll Results 2023: Complete overview of predictions

நாகாலாந்து மாநிலம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 184 வேட்பாளர்கள் களத்தில் மோதுகின்றனர். இங்கு பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

அகுலுடோ தொகுதியில் மட்டும் பாஜக தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்றது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் பாஜக வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார். இதனை தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அதிகாரபூர்வமாகவும் அறிவித்துவிட்டார்.

இதனால், நாகாலாந்நில் 59 தொகுதிகளுக்கு மட்டும்  வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Megalaya Exit Poll Results 2023: மேகாலயா தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்

எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் ஜன்சக்தி கட்சி 15 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கும் மார்ச் 2ஆம் தேதி ஒரே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. நாகாலாந்தில் பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை.

இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. 

Matrize - Zee Exit Polls:

பாஜக கூட்டணி > 39

என்.பி.எஃப். > 3

காங்கிரஸ் > 2

மற்றவை > 15

Times Now Exit Polls:

பாஜக கூட்டணி > 44

என்.பி.எஃப். > 6

காங்கிரஸ் > 0

மற்றவை > 9

Axiz My India Exit Polls:

பாஜக கூட்டணி > 43

என்.பி.எஃப். > 5

காங்கிரஸ் > 1

மற்றவை > 10

Nagaland Assembly Elections Exit Poll Results 2023: Complete overview of predictions

Tripura Exit Poll Results 2023: திரிபுரா தேர்தல் எக்ஸிட் போல் கணிப்புகள் முழுமையான விவரம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios