My fight is to take forward Mahatma Gandhi ideology Meira Kumar

ஜனாதிபதி தேர்தல் என்பது தலித்துகளுக்கு இடையிலான போட்டி அல்ல. நான் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை முன்வைத்து நான் போராடுவேன் என்று எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் தெரிவித்தார்.

சபர்மதி ஆஸ்ரமம்

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தின் நூற்றூண்டு விழாநேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் மோடிகலந்து கொண்டு பேசினார்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மீரா குமார் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருநது தனது பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.

பிரசாரம் தொக்கம்

அதேசமயம், பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தனது பிரசாரத்தை தொடங்கி மாநிலம் வாரியாக ஆதரவு கேட்டு வருகிறார்.

இருவரும் இன்று சென்னை வந்து, அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளிடம் ஆதரவு கோருகின்றனர்.

ராட்டையில் நூல்

சபர்மதி ஆஸ்ரமத்துக்கு மீரா குமார், காங்கிரஸ் தலைவர்கள்பரத்சிங் சோலங்கி, சங்கர்சிங் வகேலா ஆகியோருடன் நேற்று வந்தார்.

அங்கு ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஆஸ்ரமத்தில் தங்கி, ராட்டையில் நூல் நூற்றார்.

அதன்பின், ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

சித்தாந்தப் போட்டி

ஜனாதிபதி தேர்தல் இரு தலித் வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டியாக பார்க்கக் கூடாது.

இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போட்டியாக கருத வேண்டும்.

ஆனால், ஜனாதிபதி தேர்தலை, தலித்களுக்குள் நடக்கும் போட்டியாக காட்ட சிலர் முயற்சிக்கிறார்கள்.

ஆனால், குஜராத்தில் இருந்து எனது பிரசாரத்தை தொடங்கி, நாடுமுழுவதும் காந்தியின் சித்தாந்தங்களை பரப்ப இருக்கிறேன்.

மக்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் எனது பிரசாரத்தை சபர்மதி ஆஸ்ரமத்தில் தொடங்கினேன். நமது சித்தாந்தங்களுக்காக போராடுவோம்’’ என்று தெரிவித்தார்.

 கோவிந்த், மீரா குமார் இன்று சென்னை வருகை

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ராம் நாந்த் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மீரா குமார் ஆகியோர் இன்று சென்னை வந்து ஆதரவு திரட்டுகிறார்கள். பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம் நாத் கோவிந்த், முதல்வர் எடப்பாடிபழனிசாமியைச் சந்தித்து ஆதரவு கோருகிறார். மேலும் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேச உள்ளார்.

அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் மீரா குமார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள், மாநிலத் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசுஉள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.