பயிற்சியாளர் யார் என்று கூட தெரியாத ஜிம்களுக்கு இந்து பெண்கள் செல்லக்கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். இது எவ்வளவு பெரிய சதி என்று உங்களுக்குத் தெரியாது. வீட்டிலேயே யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது.
கல்லூரி செல்லும் இந்துப்பெண்களோ, இஸ்லாமிய பெண்களோ ஜிம்மிற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஜிம்மிற்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே யோகா பயிற்சி செய்யவோ அல்லது உடற்பயிற்சி செய்யவோ வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ கோபிசந்த் படால்கர் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பாஜக எம்.எல்.ஏ கோபிசந்த் படால்கர்,‘‘ ஜிம்களில்ஒரு பெரிய சதி நடந்து வருகிறது. அங்கு இந்து பெண்களை கவர்ந்திழுக்கிறார்கள். இது ஒரு தீவிரமான சதியின் ஒரு பகுதி.
பயிற்சியாளர் யார் என்று கூட தெரியாத ஜிம்களுக்கு இந்து பெண்கள் செல்லக்கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். இது எவ்வளவு பெரிய சதி என்று உங்களுக்குத் தெரியாது. வீட்டிலேயே யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது. ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. கல்லூரிகளுக்கு வரும் இளைஞர்களின் அடையாளம் சரிபார்க்கப்பட வேண்டும்.

அடையாளம் தெளிவாகத் தெரியாதவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நாம் ஒரு வலுவான தடுப்பு பொறிமுறையை உருவாக்க வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.
அவரது இந்தப்பேச்சு இப்போது அரசியல் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. பாதல்கரின் பேச்சு வகுப்புவாதமாகவும், பெண்கள் சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பது நியாயமற்றது என்று காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் கூறினர். இதற்கிடையில், சில பாஜக தலைவர்கள் பாதல்கரின் பேச்சு கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சு அல்ல. கொள்கையுடன் முரண்படும் ஒரு தனிப்பட்ட கருத்து என்று நிராகரித்துள்ளனர்.
