கள்ளக்காதலை கண்டித்த புது மாப்பிள்ளையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு மாவட்டம் டி. நரசிபுரா தாலுகா வரலஹள்ளி  கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராஜு. இவரது மனைவி ஷில்பா. இருவரும் கடந்த சில மாதம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் என்பவர் ஷில்பாவை காதலித்து வந்துள்ளார். திருமணம் ஆனாலும் ஷில்பாவும்  மகாதேவும் யாருக்கும் தெரியாமல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தனர்.  இந்த கள்ளத் தொடர்பு விவகாரம் ஷில்பாவின்  கணவரான புதுமாப்பிள்ளை சித்தராஜுவுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து மனைவி மமதாவிடம், ‘‘இது தவறான அணுகுமுறை.

எனவே நீ இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு இது நல்லதல்ல’’ என்று  அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஷில்பா கடும் கோபமடைந்துள்ளார். தனது கணவர் கூறிய அறிவுரை குறித்து கள்ளக்காதலன் ராமிடம் ஷில்பா தெரிவித்தார். இதையடுத்து சித்தராஜு தொடர்ந்து கள்ளக் காதலுக்கு தொல்லை கொடுத்து வருவதால் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷில்பா கேட்டுள்ளார்.

புதுக் கணவரின் கண்டிப்பினால் மமதா மனம் மாறி இனி தன்னை தனிமையில் சந்திப்பதை நிறுத்தி விடுவாளோ என்ற பயம் ராம்க்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் ராம், சித்தராஜுவை தீர்த்துக் கட்ட ப்ளான் போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சித்தராஜுவை கொடூரமாக அடித்துக் கொலை செய்து அதே பகுதியில் யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர். மறுநாள் தனது கணவர் காணாமல் போய் விட்டதாக ஷில்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஷில்பாவிடம் நடத்தி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
சில்பா மீது சந்தேகம் வலுத்ததால் தொடர்ந்து கேள்விகள் கேட்டதால் ஷில்பா உண்மையை கூறியுள்ளார்.

இந்த வாக்குமூலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஷில்பா தெரிவித்தார். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ராம்மை கைது செய்ய முற்பட்டபோது, கைது நடவடிக்கைக்கு பயந்த ராம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.