Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா.!! 570 மடங்கு அதிகமாக விற்பனையான காண்டம்.. சென்னையும் லிஸ்ட்ல இருக்கா?

2020ல் லாக்டவுன் கட்டுப்பாடுகளாலும், கொரோனா தொற்றுக்குப் பயந்து இந்திய மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

Mumbai Tops the chart in Ordering Condoms from Swiggy Instamart
Author
First Published Sep 2, 2022, 10:11 PM IST

இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளான காய்கறி, உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், ஆடை என அனைத்தையும் ஆன்லைனில் வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாகப் பெரு நகரங்களில் மக்கள் ஆன்லைன் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mumbai Tops the chart in Ordering Condoms from Swiggy Instamart

மேலும் செய்திகளுக்கு..உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? அப்போ..! சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க

2020ல் இந்திய மக்கள் அதிகளவில் காண்டம் வாங்கியுள்ளனர் என்ற தகவல் அப்போது வெளியே வந்தது என்பதை இங்கு மீண்டும் குறிப்பிடுவது எதற்கு என்றால், இதற்குத்தான். உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் என்ற பிரிவானது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இன்ஸ்டாமார்ட் சேவையில் உடனடி உணவு பண்டங்கள், ஐஸ்கிரீம்கள், பானங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற பல்வேறு வகைகளான பொருட்களை வாங்கலாம். 

இந்தியாவின் பெரு நகரங்களில் முன்னணி வகிக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டை அதிகளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் தளத்தில் காண்டம் விற்பனை ஆனதுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இருக்கும் மும்பை வாடிக்கையாளர்கள் கடந்த 12 மாதங்களில் அதிகளவிலான ஆணுறைகளை ஆர்டர் செய்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Mumbai Tops the chart in Ordering Condoms from Swiggy Instamart

கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 570 மடங்கு அதிகமாகக் காண்டம்களை ஆர்டர் செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஐஸ்கிரீம் ஆர்டர்கள் 42% உயர்ந்துள்ளன. இதில் சுவார்ஸ்யம் என்னவென்றால் பெரும்பாலான ஐஸ்கிரீம் ஆர்டர்கள் இரவு 10 மணிக்கு மேல் வந்துள்ளன. கோடை விடுமுறைக்காலத்தில் ஹைதராபாத்தில் வெப்பம் அதிகமாக இருந்த சூழலில் 27000க்கும் மேற்பட்ட ஜூஸ் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

முட்டைகளுக்கான ஆர்டர்கள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் முட்டைகளுக்கு 5 கோடி ஆர்டர்கள் வந்துள்ளன என்றும், பொதுவாக முட்டை ஆர்டர்கள் காலை நேரத்தில் வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 56 லட்சம் பாக்கெட் நூடுல்ஸ், 3 கோடி பால் பாக்கெட், 2 லட்சம் பாத்ரூம் சுத்தம் செய்யும் ஆர்டர்கள் குவிந்துள்ளது என்றும் தனது அறிவிப்பில் கூறி இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்.

மேலும் செய்திகளுக்கு..அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !

Follow Us:
Download App:
  • android
  • ios