Mumbai Rly station fire
மும்பை, பாந்த்ரா அருகே பெஹ்ராம்படாவில் உள்ள ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
பாந்த்ரா ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு குடிசை பகுதியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து, அருகில் உள்ள ரயில் நிலையத்தையும் பாதித்தது. ரயில் நிலையத்தில் தீ பற்றியதை அடுத்து, 9 தீயணைப்பு வாகனங்கள், 7 ஜம்போ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
