mumbai hero taken selfie with his girl fan in mumbai

மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் வருண் தவான், தன்னுடைய பெண் ரசிகையுடன் காரில் சென்றவாறே செல்பி எடுத்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது

மும்பை சாலையில் நேற்று காரில் பயணம் செய்த நடிகர் வருண்தவானை பார்த்த ரசிகை ஒருவர் அவரிடம் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, தான் பயணித்த ஆட்டோவில் இருந்தபடியே கேட்டார்

செல்பி

ரசிகையை வருத்தம் கொள்ள செய்யகூடாது என நினைத்த நடிகர் உடனே அவரிடம் உள்ள செல்போனை வாங்கி, ஒரே நேர்கோட்டில் ஆட்டோவும் காரும் இயக்கவே, நடிகரும் ரசிகையும் ஒரே நேரத்தில் தன் தலையை வெளியில் நீட்டி செல்பி எடுத்து உள்ளனர்.

Scroll to load tweet…

இதனை பார்த்த ஒரு நபர் தன் மொபைல் மூலம் போட்டோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டு உள்ளார்.

இந்த நிகழ்வை பார்த்த மும்பை போலீசார் இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்து உள்ளனர்.அதில் "தன் உயிரை பற்றி கூட கவலை படாமல் நடுரோட்டில் இது போன்று அபாயகரமாக செயல்படுவதை கண்டிப்பதாகவும், இதை பார்க்கும் தங்கள் ரசிகர்கள் கூட உங்களை போன்றே செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Scroll to load tweet…

மன்னிப்பு

இதற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் வருண் தவான் ட்வீட் செய்துள்ளார். இந்த சம்பவம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அதே வேளையில் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்