பரபரப்பு.. இந்தியாவில் XE வைரஸ் பாதிப்பு இல்லை..மும்பையில் பாதிக்கப்பட்டவருக்கு அந்த வைரஸ் இல்லை..மத்திய அரசு

மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 

Mumbai case not XE coronavirus variant - Govt

கொரோனா பாதிப்பு:

கொரோனா பெருந்தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான், டெல்மிக்ரான் எனும் பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 4 டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவு தன்மையை கொண்டதாக இருந்தது. ஆனால் முன்னால் கண்டறியப்பட்ட உருமாற்றங்களை விட குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஒமைக்ரான் திரிபு கொரொனா வைரஸின் இறுதி உருமாற்றம் என்றும் இதோடு கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு எக்ஸ்இ வகை வைரஸ் சீனா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. 

கட்டுப்பாடுகள் தளர்வு:

இதனிடையே இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது. பின்னர் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் மெல்ல மெல்ல பாதிப்புகள் குறைய தொடங்கியது. அந்த வகையில், ஒரு கொரோனா நாள் பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக குறைவாக பதிவானது. இதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கின. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து மார்ச் இறுதியில் பெருமளவு குறைந்தது. இந்நிலையில் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணுக்கு மரபணு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமைக்ரானிலிருந்து மாறுப்பட்ட எக்ஸ்இ வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது.

எக்ஸ் இ வைரஸ் பாதிப்பு இல்லை:

இந்நிலையில் இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பாதிப்பட்டதாக கூறப்படுவரின் மருத்துவ கோப்புகள் அனைத்தையும் மரப்பணு நிபுணர்கள் சோதனை செய்தனர். மேலும் தற்போதையை சான்றுகளின் படி, எக்ஸ்இ வகை கொரோனா பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 50 வயது பெண் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்று வந்துள்ளது. மேலும் அவர் வேறு எந்த நாடுகளுக்கும் பயணம் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகையான பிஏ.2 வைரஸை  விட எக்ஸ்இ வகை வைரஸ் 10 % வேகமாக பரவக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை எக்ஸ்இ வகை வைரஸ் முந்தைய கொரோனா வகைகளை விட வேகமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்இ எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும்.

மேலும் படிக்க:XE recombinants virus: இந்தியாவில் பதிவானது முதல் XE வகை கொரோனா வைரஸ்… மும்பையில் கண்டறியப்பட்டதாக தகவல்!!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios