மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டாங்கிரி பகுதியில் உள்ள தாந்தல் தெருவில் 4 மாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கட்டம் இன்று காலை 11 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்டுகப்பட்டுள்ளன. பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், மும்பையில் பெய்த தொடர் மழை காரணமாக அஸ்திவாரம் உறுதித்தன்மையை இழந்து கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.