26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வுர் ஹுசைன் ராணாவின் NIA காவலை டெல்லி நீதிமன்றம் 12 நாட்கள் நீட்டித்துள்ளது. ராணா சிறப்பு NIA நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, மும்பை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

Mumbai attack convict Tahawwur Rana : 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வுர் ஹுசைன் ராணாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA) காவலை டெல்லி நீதிமன்றம் திங்களன்று 12 நாட்கள் நீட்டித்துள்ளது. ராணா, சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங் முன், 18 நாள் NIA காவல் முடிவடைந்த நிலையில், கடும் பாதுகாப்புடன் முகத்தை மூடியபடி ஆஜர்படுத்தப்பட்டார்.

தஹவ்வுர் ராணா சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். மத்திய புலனாய்வு முகமையின் சட்டக் குழு, மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் தலைமையில் நீதிமன்றத்தில் ஆஜரானது.

#WATCH | 26/11 terror attack accused Tahawwur Rana being taken from Delhi's Patiala House Court. 

The National Investigation Agency (NIA) court extended his custody for 12 days pic.twitter.com/Ux8l2c1AKY

— ANI (@ANI) April 28, 2025

மும்பை காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள், 26/11 தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் தஹவ்வுர் ஹுசைன் ராணாவை டெல்லியில் உள்ள NIA அலுவலகத்தில் சனிக்கிழமை விசாரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணாவிடம் என்ஐஏ விசாரணை

மும்பை காவல்துறை அதிகாரிகளின் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை ராணா எட்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டார், அப்போது அவர் நேரடியான பதில்களைத் தரவில்லை. பாகிஸ்தான்-கனடா வம்சாவளியைச் சேர்ந்த தஹவ்வுர் ஹுசைன் ராணா, முன்னாள் ராணுவ மருத்துவர், தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. முன்னதாக, தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரிய தஹவ்வுர் ராணாவின் மனுவை டெல்லியின் பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங் வியாழக்கிழமை அவரது மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தார். வெளிநாட்டவரான தனது காவலில் தனக்கு அளிக்கப்படும் நடத்தைகள் குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள அடிப்படை உரிமை உள்ளது என்று ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச் தேவா வாதிட்டார். இருப்பினும், NIA விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காரணம் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி இந்த கோரிக்கையை எதிர்த்தது.

ராணா மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சதி, பயங்கரவாதம், மோசடி மற்றும் போர் தொடுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்ட குற்றங்களுக்காக மட்டுமே அவர் மீது வழக்குத் தொடர முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும், UAPA பிரிவுகள் 16 மற்றும் 18 பொருந்துவதால், வழக்கின் பயங்கரவாதம் தொடர்பான தன்மை காரணமாக, தரநிலை குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) வரம்புகளுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்ட காவல் அனுமதிக்கப்படலாம்.