Asianet News TamilAsianet News Tamil

முல்லைப் பெரியாறு அணை டபுள் ஸ்ட்ராங்கா இருக்கு… உச்சநீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்த மத்திய அரசு அறிக்கை!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்த பளுதுகள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் ஒரு சில வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

Mullai periyar dam is very strong condition - central govt team file a statement in supreme court
Author
Delhi, First Published Oct 18, 2021, 10:32 AM IST

முல்லைப் பெரியாறு அணையில் இருந்த பளுதுகள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் ஒரு சில வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் தரம்குறைந்து விட்டதாக தொடர்ச்சியாக கூறிவரும் கேரளா, புதிய அணையை கட்ட வேண்டும் என்றும் முயற்சித்து வருகிறது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதால் கேரள அரசின் முயற்சிகள் எடுபடவில்லை. இந்தநிலையில், கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ரசூல் என்பவர்,  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை சுட்டிக்காட்டி அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Mullai periyar dam is very strong condition - central govt team file a statement in supreme court

இந்த மனு மீதான விசாரணை  உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.  கடந்த முறை வழக்கு விசாரணையின் போது முல்லைப் பெரியாறு அணையின் தரத்தை உறுதி செய்ய சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக்கொண்டார். அப்போது, இந்திய நிபுணர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அணையின் தற்போதையை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட்டனர்.

Mullai periyar dam is very strong condition - central govt team file a statement in supreme court

இந்தநிலையில், முல்லை பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மத்திய அரசு குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், முல்லை பெரியாறு அணைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு விட்டது. அணைக்கான மதகுகள், கதவுகள் என நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தேவைகளும், பழுதுகளும் சரிசெய்யப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள ஒரு சில சிறுசிறு வேலைகள் இந்த ஆண்டுக்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையின் பாதுகாப்பு சம்மந்தமாக பேச இனி எதுவும் இல்லை என்றும் மத்திய அரசின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios