உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல் அவரின் சொந்த ஊரான சைபை கிராமத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. 

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல் அவரின் சொந்த ஊரான சைபை கிராமத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. 

திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு முலாயம் சிங் யாதவ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

82 வயதான முலாயம் சிங் யாதவ் நீண்டகாலமாக உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நுரையீரல் குறைபாடு காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக முலாயம் சிங் யாதவ் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

Scroll to load tweet…

மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து முலாயம் சிங் யாதவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், பலன் அளிக்காமல் நேற்று காலை மரணமடைந்தார். இந்நிலையில் நேற்று இரவு முலாயம் சிங் யாதவ் உடல், அவரின் சொந்த ஊரான சைபாலி கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று பிற்பகலில் முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்செய்யப்படுகிறது.

கவனமாக இருங்கள்! காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது: பாஜகவினருக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

முலாயம் சிங் யாதவ் உடலுக்கு நேற்று இரவிலிருந்து ஏராளமான தொண்டர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதுதவிர முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்சர்கள், பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Scroll to load tweet…

இந்நிலையில் சைபை கிராமத்தில் உள்ள சைபைமேளா மைதானத்தில் முலாயம் சிங் யாதவ் உடல் தகனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக முலாயம் சிங் யாதவ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு அ ரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் வந்திருந்தார்கள்.
திமுக சார்பில் டிஆர் பாலு எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்தியா-சீனா நேரடி விமான சேவை தொடங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத், மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி. பிரமோத் திவாரி, ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ், தெலங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்

Scroll to load tweet…

பாஜக சார்பில் உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பிரிஜேஷ் பதக், அமைச்சர் ஜிதின் பிரசாதா, சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன், அவரின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் நேரில் வந்துஅஞ்சலி செலுத்தினர்.

சிமெண்ட் உற்பத்தியில் அதானி குழுமம் ஆதிக்கம்: கடனில் தத்தளிக்கும் முக்கிய நிறுவனத்தை வாங்க திட்டம்

பாஜக தலைவர் ரிதா பகுகுணா ஜோஷி, யோகா குரு பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

முலாயம் சிங் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது அகிலேஷ் யாதவுடன், யோகா குரு பாபா ராம்தேவ் உடன் சென்றார். சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது தந்தை முலாயம் சிங் யாதவுக்கு முறைப்படி அனைத்து இறுதிச்சடங்களும் செய்தபின், அவரின் சிதையை எரியூட்டினார்.