பஞ்சாப்பில், மருமகன் முறையுள்ள ஒருவரை மாமியார் முறை கொண்ட பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த 37 வயதி பெண் ஒருவர், தன்னுடைய 18 வயது மகளை மனம் முடித்த மருமகனின், அண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மருமகன் முறையுள்ள ஒருவரை இந்த பெண் திருமணம் செய்து கொண்டதற்கு தற்போது அவருடைய குடும்பத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மேலும் இந்த செய்தி, அவருடைய மகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய மகள் காதலித்தவரையே, 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து வைத்த இவர், மகள் திருமணத்திற்கு பின், தன்னுடைய மருமகனின்,  அண்ணனுடன் முறையற்ற உறவை வளர்த்து கொண்டுள்ளார்.

நாளடைவில், இவர்களுடைய முறையற்ற காதல் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாராகினர். இவர்களின் பழக்க வழக்கம் குறித்து அறிந்ததும் ஆரம்பத்தில் அதிர்ச்சியான குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.

ஆனால், தற்போது இவர்கள் தங்களுடைய விருப்பம் படி திருமணமும் செய்து கொண்டு, பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.  இந்த சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.