உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்றுத் தந்த மருமகளுக்கு மாமியார் ‌கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரேமா தேவி. இவரது மருமகள் குஷ்புவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. தனக்கு பேத்தி பிறந்த சந்தோஷத்தில் மருமகள் குஷ்புவுக்கு ஹோண்டா சிட்டி காரை மாமியார் பிரேமா பரிசாக வழங்கியுள்ளார். மருமகளை மகளாக பாவிக்க வேண்டும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் கருவை கலைக்காமல், காக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் காரை பரிசாக வழங்கியதாக பிரேமா தேவி தெரிவித்துள்ளார்.