Asianet News TamilAsianet News Tamil

டீ போட்டு வர சொன்ன மாமியார்.. மறுத்த மருமகள்.. இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்!

கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

mother in law arrested for killing daughtern in law tvk
Author
First Published Jun 28, 2024, 3:42 PM IST

டீ போட்டு கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளை மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஹாசன் நகரை சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம்(53) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையும் படிங்க: கூலிப்படை தலைவனும் பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்! நடந்தது என்ன?

இந்நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் டீ போட்டு தரும்படி மாமியார் கூறியுள்ளார். ஆனால் டீ எல்லாம் போட்டு தரமுடியாது மருமகள் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த மாமியார்  ஃபர்சானா தனது மருமகள் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

இதையும் படிங்க:  வேலைக்கு வந்த சித்தாளை கரெக்ட் செய்து உல்லாசம்.. கழற்றிவிட நினைத்ததால் ஆத்திரத்தில் மேஸ்திரி செய்த காரியம்!

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஜ்மீரா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இக்கொலை தொடர்பாக மாமியார் ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios