More work for women transgender in Kochi Metro Rail

நாட்டின் 8-வதும், கேரளாவின் முதல் மெட்ரோ ரெயிலான, ஆலுவா முதல் பழரிவாட்டம்வரையிலான கொச்சி மெட்ரோ ரெயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரெயிலில் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்ததற்கும், திருநங்கைகளுக்கு பணி அளித்ததற்கும், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதற்கும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

காங். ஆட்சியில்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங் கொச்சி மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கட்டுமானம் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

4 ஆண்டுகள்

ஏறக்குறைய 4 ஆண்டுகள் உழைப்புக்கு பின் ரூ.5 ஆயிரத்து 181 கோடி மதிப்பில் கொச்சி மெட்ரோரெயில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டில் 50:50 சதவீதம் மாநில அரசும், மத்திய அரசும் பகிர்ந்து கொண்டுள்ளன.

தொடக்கம்

ஆலுவா நகர் முதல் பழரிவாட்டம் வரையிலான 13 கி.மீ தொலைவு மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று ரிப்பன்வெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது முதல்வர் பினராயி விஜயனுக்கும், மெட்ரோமேன் தரனுக்கும் கைகுலுக்கி பிரதமர் மோடி வாழ்த்துக்கள்பழரிவாட்டம் ரெயில்நிலையத்தில் ரிப்பன் வெட்டி ரெயிலின் முதல் பயணத்த தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதில் பயணமும் செய்தார்.

ரெயில் பயணம்

இந்த பயணத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் பி. சதாசிவம், நகரமேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, ‘மெட்ரோ மேன்’ எனக் கூறப்படும் தலைமைப் பொறியாளர் இ. தரன், நகரமேம்பாட்டு துறை செயலாளர் ராஜீவ் கோபா, கேரள தலைமைச் செயலாளர் நலினி நீட்டோ, பா.ஜனதா மாநில தலைவர் கும்மணம்ராஜசேகர் ஆகியோரும் பயணம் செய்தனர்.ரெயிலை யோகேஷ் சைனி, சுமித் குமார் ஆகிய இருவர் இயக்கினர்.

பொதுக்கூட்டம்

அதன்பின், கலூரில் என்ற இடத்தில் உள்ளஜவஹர்லால் நேரு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். முதலில் சில வாரத்தைகள் மலையாளத்தில் பேசிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதாவது-

பாராட்டு

கொச்சி மெட்ரோ ரெயில்திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய அரசு நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முழுமையான சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

நகரமைப்பு திட்டத்தில், கொச்சி மெட்ரொ ரெயில்முன் உதாரணமாக திகழ்கிறது. மக்களை மையாக வைத்து, சாலைப் போக்குவரத்தையும்,ரெயில் போக்குவரத்தையும், நீர்வழிப்போக்குவரத்தையும் சிறப்பாக கேரளா கையாள்கிறது.

வர்த்தக தலைநகர்

கடந்த 2016ம் ஆண்டில் கொச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. ஆதலால், அடுத்து வரும் காலம் நல்ல காலமாக கொச்சிக்கு இருக்கும்.

அரேபிக் கடலின் ராணி எனச் சொல்லப்படும் கொச்சி ஒருநேரத்தில் முக்கிய வர்த்தக மையாக இருந்தது. இப்போது, மாநிலத்தின் வர்த்தகத் தலைநகராக மாறிவிட்டது.

மத்தியஅரசு உதவி

ஏறக்குறைய ரூ.5. 181 கோடியில் கொச்சிமெட்ரோ ரெயில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதி தொகையை அதாவது ஏறக்குறைய ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. எதிர்கால தலைமுறையினருக்கான கட்டுமானம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.

எதிர்காலசந்ததி

திட்டங்களை சரியான காலத்தில் நடைமுறைப்படுத்தும் ‘பிரகதி’ கூட்டத்தில் ஏறக்குறைய 175 திட்டங்களை நான் நேரடியாக ஆய்வு செய்து, அதில் உள்ள பிரச்சினைகளை, சிக்கல்களை களைந்து வருகிறேன். இதன் திட்டமதிப்பு ரூ.8 லட்சம் கோடியாகும்.

என்னுடைய அரசு எதிர்காலத் தலைமுறையினருக்கான கட்டமைப்புகளான போக்குவரத்து, டிஜிட்டல், மற்றும் எரிவாயுக்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.