Asianet News TamilAsianet News Tamil

காக்கிச் சட்டைகளையும் கலவரப்படுத்தும் கொரோனா... 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸார் விடுப்பில் செல்ல உத்தரவு..!

காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே நோய்த் தாக்கம் உள்ளவர்கள் விடுப்பில் செல்லும்படி மும்பை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. 

More than 55 years of police leave
Author
Maharashtra, First Published Apr 29, 2020, 11:00 AM IST

காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே நோய்த் தாக்கம் உள்ளவர்கள் விடுப்பில் செல்லும்படி மும்பை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. More than 55 years of police leave

உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.  நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.  இதனால், கொரோனா பரவல் அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாட்டில் அதிக அளவாக  மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஒரு நாளில் 31 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 369ல் இருந்து 400 ஆக இன்று உயர்ந்து உள்ளது. 1,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.More than 55 years of police leave

கொரோனா தடுப்பு பணியில் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல் துறையிலும் பலருக்கு கொரோனா பரவி உள்ளது.  மகாராஷ்டிராவில் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 107 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள். More than 55 years of police leave

மும்பையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 3 போலீஸ்காரர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனையடுத்து, மும்பை காவல்துறையில் பணியாற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்பே நோய்த்தாக்கம் உள்ளவர்கள் விடுப்பில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்துபோன 3 போலீஸ்காரர்களும், மருத்துவமனையில் உள்ள போலீஸ்காரர்களும் 55 வயதைக் கடந்தவர்கள். இதனை கருத்தில் கொண்டு, 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் விடுப்பில் செல்லும்படி கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios