துறைமுகத்தில் தீ விபத்து..! கொழுந்துவிட்டு எரியும் 60க்கும் மேற்பட்ட படகுகள்- போராடும் தீயணைப்பு வீரர்கள்
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பலாயின- தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளுந்து விட்டு படகுகள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் உள்ளன. நேற்று காலை மீன் பிடித்துவிட்டு மீனவர்கள் திரும்பிய நிலையில் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்துள்ளனர். இந்தநிலையில் இன்று அதிகாலை ஒரு படகில் பிடித்த தீயானது அடுத்தடுத்து படகுகளுக்கு பரவியது. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. படகில் இருந்த டீசல், எண்ணெய் மற்றும் சமையல் எரியாவு உள்ளதால் தீயானது வேகமாக பரவியது.
60க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்
தீயானது வேகமாக பரவியதைடுத்து தீப்பிடிக்காத படகுகளை மீனவர்கள் கடலுக்குள் கொண்டு சென்று நிறுத்தினர். இந்தநிலையில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக விரோதிகள் வலையில் தீ வைத்ததன் காரணமாகவே தீ விபத்து நடைபெற்றதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 60க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் எரிந்து கருகியதால் 1000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
AI குரலைக் கேட்டு ஏமாந்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் அபேஸ்! இந்த மாதிரி கால் வந்தா உஷாரா இருங்க...