more than 100 voter IDs in dust bin in west bengal

மேற்குவங்க மாநிலத்தில் குப்பைத் தொட்டியில் நூற்றுக்கும் அதிகமான வாக்காளர் அடையாள அட்டைகள் தூக்கி எறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் அடிப்படைத்தேவைகள் தொடர்பாக அரசோ அதிகாரிகளோ நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்திய குடிமகன் என்ற அங்கீகாரத்தை அளிக்கும் விதமான அடையாள ஆவணங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவர். ஆனால், அதுபோன்று இல்லாமல், மேற்கு வங்கத்தில் நூற்றுக்கும் அதிகமான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

மேற்குவங்க மாநிலம் உத்தர்பாராவில் இன்று காலை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுப் பணியாளர், குப்பைத் தொட்டியில் கிடந்த நூற்றுக்கும் அதிகமான வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டு அதிர்ந்தார். உடனடியாக துப்புரவுப் பணியாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாக்காளர் அடையாள அட்டைகளை ஹூக்ளி காவல் நிலையத்தில் வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.