பஞ்சாப் தொழிற்சாலை வாயு கசிவால் 11 பேர் துடிதுடித்து பலி.! ஊதா நிறத்தில் மாறிய உடல்கள்.! நடந்தது என்ன.?
பஞ்சாப்பில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவில் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தொழிற்சாலையில் வாயு கசிந்து விபத்து
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான கோயல் மில்க் பிளாண்ட், குளிரூட்டும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியான விஷ தன்மை கொண்ட வாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தொழிற்சாலை அருகே வசிப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீடுகளிலேயே மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. மேலும் மூச்சு திணறல் ஏற்பட்டு தங்கள் குழந்தைகளோடு மருத்துவமனைக்கு சென்றவர்களும் உடல் முழுவதும் ஊதா நிறத்தில் மாறியதோடு துடி துடித்து இறந்தனர். வாழு கசிவு காரணமாக தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் அங்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மூச்சு திணறி 11 பேர் பலி
இதனையடுத்து பாதுகாப்ப உபரகரணங்களோடு அந்த பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர் 11 பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டவர்கள் சுயநினைவின்றி மீட்கப்பட்டுள்ளனர். வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புப் படை குழுவினரும் அந்த இடத்தில் குவிந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக லூதியானாவின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா கூறுகையில், தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே மக்களை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஈடுபட்டள்ளது. முதல்கட்டமாக இந்த சம்பவத்தில் 9 பேர் இறந்துள்ளனர். 11 பேர் மயக்க நிலையில் உள்ளனர். வாயுவின் தன்மை மற்றும் ஆதாரங்கள் இன்னும் அறியப்படவில்லையென கூறினார்.
தயார் நிலையில் உதவிகள்
பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் எரிவாயு கசிவு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் எரிவாயு கசிவு சம்பவத்தில் பாதித்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.