Asianet News TamilAsianet News Tamil

ஜி-20 தலைமையை நாளை ஏற்கிறது இந்தியா... நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒளிரவிட ஏற்பாடு!!

ஜி-20 தலைமையை நாளை இந்தியா ஏற்க உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

monuments all over the country will be illuminated due to India assuming the leadership of G 20 tomorrow
Author
First Published Nov 30, 2022, 11:44 PM IST

ஜி-20 தலைமையை நாளை இந்தியா ஏற்க உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்மையில் இந்தோனேசியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (டிச. 1) அதிகாரபூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இதற்காக நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட்… பெங்களூர் பள்ளியில் மேற்கொண்ட சோதனையின் போது அதிர்ச்சி!!

அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதனால் அதற்கு முன்னதாக நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. முதன் முதலாக ஜி-20 ஷெர்பா கூட்டம் உதய்பூரில் டிசம்பர் 4 முதல் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் ஜி-20 மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் வரும் டிச.5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: 2021-22 ஜூலை-செப். காலாண்டில் ஜிடிபி 8.4 சதவீதம் அதிகரிப்பு… என்.எஸ்.ஓ (NSO) வெளியிட்ட அறிக்கையில் தகவல்!!

இதனிடையே ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அதனுடன் சுற்றுலா, கலாசாரம் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை ஜி-20 நிகழ்வுகளுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜி-20 என்ற மாபெரும் நிகழ்வின் மூலம் பிராண்ட் இந்தியா விளம்பரப்படுத்தப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios