Asianet News TamilAsianet News Tamil

2021-22 ஜூலை-செப். காலாண்டில் ஜிடிபி 8.4 சதவீதம் அதிகரிப்பு… என்.எஸ்.ஓ (NSO) வெளியிட்ட அறிக்கையில் தகவல்!!

2021-22 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Indias GDP grows at 6 3 pc in July to Sep 2022 to 23
Author
First Published Nov 30, 2022, 6:27 PM IST

2021-22 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆய்வாளர்கள் 5.8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை பரந்த அளவிலான வளர்ச்சிக் கணிப்புகளை வழங்கியுள்ளனர், கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருந்தது. காலாண்டில் காலாண்டு அடிப்படையில், 2022-23 நிதியாண்டின் முந்தைய ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதாரம் 13.5 சதவீதம் என்ற விகிதத்தில் விரிவடைந்தது.

இதையும் படிங்க: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கான தடை செல்லும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

உண்மையான ஜிடிபி அல்லது ஜிடிபி நிலையான (2011-12) மதிப்பீடு 2022-23ல் 38.17 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2021-22 ஆம் ஆண்டின் 8.4 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 2021-22ன் 2 ஆம் காலாண்டில் 6.3 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகிறது. என்று ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மதிப்பாய்வின் கீழ் உள்ள காலாண்டில் நாட்டின் உற்பத்தித் துறை 4.3 சதவீதமாக சுருங்கியது, முந்தைய மூன்று மாத காலப்பகுதியில் 5.6 சதவீதமாக இருந்தது. வேளான் துறை 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் (ஜூலை-செப்டம்பர்) ஒரு வருடத்திற்கு முன்பு, தொற்றுநோய் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. 

இதையும் படிங்க: நான்கு மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களுடன் திருமணம்… அதிர்ச்சியை ஏற்படுத்திய பிகார் நபரின் செயல்!!

ஜிடிபி வளர்ச்சி மதிப்பீட்டு நிறுவனமான ICRA-வின் கணிப்பின் படி, 2023 நிதியாண்டின் 2 ஆம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.5 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் பாரத ஸ்டேட் வங்கி வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  வெளியிடப்பட்ட கட்டுரையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.1 முதல் 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios