சாமானிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், வாரச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என யாரும் இனிவரும் காலங்களில் ரொக்கமாக சம்பளம் வாங்க முடியாது. 

ஊதியம் வழங்கும் சட்டத்தை மத்தியஅரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் போது, அனைவரும் வார, மாத ஊதியத்தை காசோலை(செக்) அல்லது ஆன்-லைன் வங்கிக்கணக்கில் மூலமே பெற முடியும். ரொக்கமாக வாங்க முடியாது. 

இந்த நடவடிக்கை மூலம் அனைத்து மக்களுக்கும் கண்டிப்பாக வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும் என்பது கட்டாயமக்கப்படுகிறது. அனைத்து பரிமாற்றங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை மோடி அரசு எடுக்க உள்ளது. 

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக, பிரதமர் மோடி செல்லாத ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை கடந்த 8-ந்ததேதி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து வங்கிகளில் மக்கள் எடுப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு பணம் எடுப்பதில் பல்வேறு புதிய விதிமுறைகளையும் புகுத்தி வருகிறது. 

நாட்டை பணமில்லா பொருளாதாரமாக உருவாக்க வேண்டும், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். இதற்காக இ-பேமெண்ட், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துதல், ஆன்-லைன் பேங்கிங், உள்ளிட்ட ரொக்கப்பணம் இல்லாபரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ள மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது. 

இதில் அடுத்தபடியாக, அனைத்து நிறுவனங்கள், சிறு,குறுநிறுவனங்களில் பணிபுரிவோர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை ரொக்கமாக வழங்காமல்,காசோலை அல்லது ஆன்-லைன் மூலம் பரிமாற்றம் செய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. 

ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நேற்று கலந்துகொண்டார். அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், “ இனி அடுத்து காலங்களில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உள்ளி்ட்டவைகள் தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் ரொக்கமாக ஊதியம் வழங்கக்கூடாது.அனைத்துயம் ஆன்-லைன் மூலமாகவோ, அல்லது காசோலை மூலமாகவோ வழங்க வேண்டும். 

இதற்காக ஊதியம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த இருக்கிறோம். தொழிலாளர்களின் ொரக்க ஊதியம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள். அதைத்தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.