அய்யோ தமிழக மக்களே உஷார்... கேரளாவுக்குள் நுழைந்தது மங்கி பாக்ஸ்..? மக்கள் பீதி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் எனும் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநில சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் எனும் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது அம்மாநில சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை இந்த வைரஸில் இருந்து முழுமையாக விடுபட முடியாமல் மக்கள் போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வைரஸ் தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, எனவே அனைவரும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் முக கவசம் அணிய வேண்டும், அந்தந்த மாநில நோய் தடுப்பு விதிமுறைகளே முழுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: அன்னக் காவடிகளாக அலைந்து கொண்டிருந்த திமுகவினர்...! அரபு நாட்டு சுல்த்தான் போல் வலம் வருகின்றனர்- ஜெயக்குமார்
இது ஒருபுறம் உள்ள நிலையில் ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தெற்கு ஆப்பிரிக்காவில் தொலைதூரப் பகுதிகளில் சர்வசாதாரணமாக இருந்து வருவதாகவும், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தொடக்கத்தில் மெல்ல பரவிய இந்த வைரஸ் சமீபகாலமாக வேகம் எடுக்கத் தொடங்கியது. தற்போது 50க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள்: இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் செல்லாது..! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்
இந்நிலையில் இந்தியா, சர்வதேச நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையம், துரைமுகம் நாட்டில் எல்லைகளில் தடுத்து நிறுத்தி பரிசோதித்து வருகிறது. இந்நிலையில் நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து பீகார் மாநிலம் வந்த மாணவி ஒருவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது பின்னர் அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்துடன், அவரின் உடலில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் மங்கி பாக்ஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த நபர் என்பதால் அவருக்கு இந்த அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், தற்போது முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு மங்கி பாக்ஸ் ( குரங்கு அம்மை) அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவரின் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பரிசோதனை முடிவுகள் இன்று மாலையோ அல்லது நாளேயோ வரக்கூடும், ஆய்வு முடிவுகள் வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் இது சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வைரஸ் 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் பரவிய இந்த வைரஸ் 2017 ஆண்டு பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வைரசால் பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் கூட இது தொற்று நோய் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.