மக்களின் வங்கி கணக்கில் பணம்... தீபாவளி பரிசு கொடுத்த புதுச்சேரி முதல்வர்!!

தீபாவளியை முன்னிட்டு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக அதற்கான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

money will be paid to bank accounts of people on the occasion of diwali says pudhucherry cm

தீபாவளியை முன்னிட்டு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக அதற்கான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தனர். மேலும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 வருடங்களாக மக்கள் பண்டிகைகளை பெரிதும் கொண்டாடவில்லை.

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராகுல் காந்தி எப்படி வாக்களிப்பார்? சர்ச்சையில் காங்கிரஸ்!

2 ஆண்டுகளுக்கு பின் தற்போது பழைய நிலவரம் திரும்பியுள்ளது. இதை அடுத்து மக்கள் அனைவரும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதை அடுத்து மக்கள் அனைவரும் புது ஆடைகளை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடியை அம்மாநிலமுதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: பள்ளி வேனுக்குள் 11 அடி ராட்சத மலைப்பாம்பு.. அலறிய பொதுமக்கள்! பயந்த வனத்துறை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ஆகியவற்றிற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மக்களின் குறைகளை கேட்டு அதை தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அதன்படி மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios