ஹவாலா பண பரிமாற்றம்... வசமாக சிக்கும் காங்கிரஸ் அமைச்சர்!
ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு கடந்த ஆண்டு காங்கிரசை சேர்ந்த அமைச்சர் சிவகுமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையொட்டி, டெல்லியிலுள்ள, சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.8.60 கோடி சிக்கியது. இது தொடர்பான புகாரில் சிக்கியவர்கள், வருமான வரித் துறை விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், சிவகுமார் உட்பட 5 பேருக்கு எதிராக, டெல்லி அமலாக்க பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் இணைந்து, பெங்களூரில், சிவகுமார், ஹவாலா பண பரிமாற்றம் செய்துள்ளதாக, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.