money can be easily taken from epf
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து மருத்துவ செலவுக்கு பணம் எடுத்துக்கொள்ளும் முறையில் ஈஸியான நடைமுறைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து தொழிலாளர்கள் மருத்துவ செலவுகளுக்காக பணம் எடுக்க வேண்டுமானால், இது தொடர்பாக வேலை செய்யும் நிறுவன முதலாளியின் சான்று, மருத்துவ சான்று போன்றவை வழங்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது.
இந்த சான்றுகளை வழங்கி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்குள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளதாக புகார் எழுந்தது.
இந்த கோரிக்கையை தை பரிசீலித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அந்த விதியை மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி இனி நிறுவன அதிபரிடம் இருந்தும், மருத்துவரிடம் இருந்தும் சான்று பெற வேண்டும் என்பதில்லை. தொழிலாளரே தனது உடல் நலக்குறைவு தொடர்பாக பிரமாண வாக்குமூலம் அளித்தால் போதுமானது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதேபோன்று இ.பி.எப். கணக்கில் இருந்து தொழிலாளர்கள் பணம் எடுப்பதற்கு 3 மாறுப்பட்ட விண்ணப்பங்களை பயன்படுத்த வேண்டியதிருந்த நிலையில் தற்போது என்ன காரணத்துக்காக பணம் எடுத்தாலும், ஒரே மாதிரியான விண்ணப்ப நடைமுறை வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
