குடிரயரசுத் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று  ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இப்பதவிக்கான தேர்தலில்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஸி ஆகியோரது பெயர்களை பா.ஜ.க. மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மோகன் பகவத்துக்கே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.

இது குறித்து விளக்கம் மோகன் பகவத் விளக்கமளித்துள்ளார்,” தொலைக்காட்டிசிகளில் எப்படி வேண்டுமானாலும் செய்தி ஒளிபரப்பாகட்டும் அதைப் பற்றி தமக்கு கவலை இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்."இவ்வாறு அவர் தெரிவித்தார்.