ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஆவது லெட்டர் போஸ்ட் பண்ண மோடி..! 

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பற்றி விளக்கமாக குறிப்பிட்டு நாட்டு குடிமக்கள் வீட்டிற்கே கடிதம் அனுப்பியுள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் இந்த செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. அதாவது, தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டு 100  நாட்கள் முடிவடைந்து உள்ளதால், அதனுடன் நலத்திட்டங்கள் பற்றி ஒரு லிஸ்ட் போட்டு, கோடிக்கணக்கான மக்களுக்கு லெட்டர் அனுப்பி உள்ளார் மோடி.

இந்த கடிதத்தில் முக்கியமாக "வறுமையின் கொடுமை என்ன என்பது எனக்கு தெரியும். ஏழைகளை தூக்கிவிட அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே மிக சிறந்த வழி என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மோடியின் இந்த வசனம் அனைவரையும் சற்று சிந்திக்க வைத்து உள்ளது. வெறும் இரண்டே பக்கம் கொண்ட இந்த லெட்டர் ஏழரை கோடி எண்ணிக்கையில் அச்சிட 15.75 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த கடிதத்தில், இறுதியாக குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் பற்றியது. இந்த திட்டம் எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என்பதை உணர வேண்டும் என்பதை விளக்கம் வகையில் இந்த லெட்டர் அமைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த ஒவ்வொரு கடிதத்திற்கும் ரூ.40  செலவு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், அரசியல் பிரச்சாரத்திற்காக, கோடி கோடியாய் செலவு செய்வதற்கு பதில், வீடு தேடி லெட்டர் அனுப்பி நலத்திட்ட உதவிகளை பற்றி அனைவரும் அறிய பிரதமர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை சூப்பர் தானுங்க என மக்கள் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.