Asianet News TamilAsianet News Tamil

மக்களவையில் சிவன் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேசியதால் பரபரப்பு; பிரதமர் மோடி பதிலடி!!

''தங்களை இந்துக்கள் என்று கூறுபவர்கள் வன்முறை, வெறுப்பு, பொய்களையே பேசி வருகின்றனர். இந்து மதம் அகிம்சையை போதிக்கிறது. வன்முறையை பரப்புபவர்கள் இந்துக்களே இல்லை'' என்று இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.

Modi vs Rahul Gandhi: BJP RSS is not entire Hindu community Rahul Gandhi showing Sivan picture
Author
First Published Jul 1, 2024, 3:12 PM IST

ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசியபோது, ''அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலை எதிர்க்கும் மக்கள் மீது திட்டமிட்ட மற்றும் முழு அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களில் பலர் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டுள்ளனர். சில தலைவர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். ஏழைகள், தலித்துகள், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நானும் 55 மணி நேரத்துக்கு மேல் விசாரிக்கப்படேன்.

அயோத்தி விழாவிற்கு அந்த ஊர் மக்கள் அழைக்கப்படவில்லை. ஆனால், அம்பானி, அதானி அழைக்கப்பட்டனர். அயோத்தி ராம ஜென்ம பூமி பாஜகவுக்கு பாடம் புகட்டியுள்ளது'' என்று பேசினார்.

இதற்கு முன்னதாக அவையில் சிவன் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேசுகையில், ''சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை. வன்முறையை குறிக்கவில்லை. அகிம்சைக்கானது. காங்கிரஸ் கட்சியினர் அவையில் சிவன் படத்தை காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கலாம்'' என்றார்.  

இவரது பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்து, ''அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறதோ அதற்கேற்ப ஆட்சி நடத்துகிறேன். மொத்த இந்து மதத்தினரையும் வன்முறையாளர்கள் என்று கூறுவது மிகவும் சீரியசானது'' என்றார்.

பாஜகவால் பாதிப்பு! மக்களவையில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்வி! எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மோடி!!


''நான் இயல்பாக பிறந்தவர் இல்லை. கடவுளால் அவதரிக்கப்பட்டவன்'' என்று மோடி கூறியுள்ளார். நாங்கள் இதை கூறவில்லை. பிரதமர் தான் கூறி இருக்கிறார். அப்படி என்றால் இவர் கடவுளிடம் பேசிய பின்னர்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா? மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் செல்லாதது ஏன்?. அரவணைத்து செல்ல வேண்டிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். நாட்டின் வேலை வாய்ப்புக்கான முதுகெலும்பு உடைந்துள்ளது'' என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ''ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ராகுல் காந்தி மக்களிடமும், நாட்டிடமும் மன்னிப்பு கோர வேண்டும்'' என்றார். மேலும், அவசரநிலை கொண்டு வந்தது மற்றும் 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தையும் அமித் ஷா குறிப்பிட்டு பேசினார். நாட்டில் காங்கிரஸ் "பயங்கரவாதத்தை" பரப்பியபோது அகிம்சையைப் பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார்.

Thirumavalavan: பூரண மதுவிலக்கு திமுகவின் எதிர்காலத்திற்கான செல்வாக்கை பெருக்கும்; திருமா அறிவுரை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios