மூதாட்டியின் காலில் விழுந்த மோடி...! நடந்தது என்ன ?
பெண்களின் மீது தனி மரியாதையும் ,தாயை போற்றும் மகனாகவும், பாரதத்திற்கே பிரதமராகவும் மோடி உள்ளார் .
இவர் சமீபத்தில் ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கான பாராட்டு விழாவில், 1௦4 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குன்வர் பாய் என்பவற்றின் காலில் விழுந்து ஆசி பெற்றார் .
குன்வர் பாய் தான் வளர்த்து வந்த ஆடுகளை விற்று கழிவறை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே போன்று, வாய்பாய் பிரதமராக இருந்த போது, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை எனும் மூதாட்டியின் கால்களை தொட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னப்பிள்ளை கிராமப்புற பெண்களின் முன்னேற்றதிற்காக பெரிதும் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையை பாராட்டி, அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாய், சின்னப்பிள்ளைக்கு விருதினை வழங்கினார்