Modi speech
‘பா.ஜனதா தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன்’… பிரதமர் மோடி நெகிழ்ச்சியான உரை
உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பல்வேறு டுவிட்டர் பதிவுகள் மூலம் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது-
‘‘சமூகத்தின் அனைத்து பிரிவினர்களிடம் இருந்தும், இளைஞர்களிடம் இருந்தும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆதரவு கிடைத்து இருப்பது என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
பா.ஜனதா தொண்டர்களின் கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன். அனைத்து மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக அவர்கள் ஓய்வின்றி உழைத்து இருக்கிறார்கள’’.
இவ்வாறு மோடி கூறி இருக்கிறார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, 125 கோடி இந்தியர்களின் வலிமையில் தனது கட்சி நம்பிக்கை வைத்துத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மற்றொரு பதிவில், ‘‘ஒவ்ெவாரு நொடியிலும் நாங்கள் செய்வது அனைத்தும் இந்திய மக்களின் நல்வாழ்வுக்காகவே இருக்கும்’’ என்று, மோடி கூறி இருக்கிறார்.
--.
