சொல்லி அடிக்கும் மோடி..!  உங்கள் வீட்டுக்கதவை தட்டும் ரூ. 5 லட்சத்திற்கான பலன்..!  இன்னும் 2  நாட்களில்! 

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள்  பயன்பெறும் வகையில் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு அட்டையை வீட்டிற்கே ரிஜிஸ்டர் தபாலில் (பதிவு அஞ்சல் ) அனுப்பி உள்ளார்  

வரும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளது. அதை விட தீவிரமாக காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக  நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், பலமான எதிர்க்கட்சியாக தான் அந்தந்த மாநிலத்கில் உள்ளது.

அடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என பரவலான கருத்து நிலவி வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி மக்கள் நலனில் பெரும் நாட்டம் காண்பித்து உள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பல்வேறு அதிரடி முடிவை எடுத்து அதனை சாத்தியமாக்கினார்.

இதனை தொடர்ந்து, ஏழை எளியமக்களும் உயர்மட்ட சிகிச்சைகள் பெரும் வகையில் ரூ.10 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, ரூ.5  லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு அட்டையை, அவரவர் விலாசத்திற்கு ரிஜிஸ்டர் போஸ்டில்,மத்திய அரசு சார்பாக அனுப்பிய வைக்கப்பட்டு உள்ளது.

அதாவது,ரேசன் கார்டுகளை, ஸ்மார்ட் கார்டாக மாற்றினார்கள் அல்லவா..? அந்த ஸ்மார்ட்கார்டில் நாம் கொடுத்துள்ள விலாசத்திற்கு இந்த காப்பீட்டு அட்டை நம் வீட்டை தேடி வந்து சேரும்.

ஆகவே, ஒரு வேளை நீங்கள் விலாசத்தை மாற்றி இருந்தால், கவலை படாமல் உங்கள் ஸ்மார்ட்கார்டில் உள்ள விலாசத்திற்கு உட்பட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று, குடும்ப தலைவர் தனது, ஐ.டி ஆதாரத்தை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.