ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததையடுத்து, கறுப்பு பணக்காரர்களும், ரியல் எஸ்டேட் ஓனர்களும் கதிகலங்கிப் போயுள்ளனர்.
இந்நிலையில், மோடியின் அடுத்த அதிரடி தங்கம் பதுக்குபவர்கள் மற்றும் கருப்புப் பணத்தை நிலமாக மாற்றி வைத்திருப்பவர்களை குறி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, மோடி தற்போது அறிவித்திருக்கும் திட்டம், வெறும் ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிக்கும்.

ஆனால், கருப்புப் பணத்தை தங்கமாகவோ அல்லது நிலங்களாகவோ மாற்றி வைத்திருப்பவர்களை ஒன்றும் செய்யாது. ஏனெனில், இந்தியாவில் ஏராளமனோர் தங்களின் கருப்புப் பணத்தை தங்கம் மற்றும் நிலங்களில் முதலீடு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏராளமானோர் லாக்கர்களில் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, லாக்கர்களுக்கும் ஆப்பு வைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிரடி திட்டம் வைத்துள்ளார். அதன்படி, லாக்கர்களில் 600 கிராம் தங்கத்திற்கு மேல் வைத்திருப்பவர்களிடம் அவற்றை ஆய்வு செய்து வரி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தங்கத்தை சேமித்து வைத்திருப்பவர்கள், அதனை முறையாக வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும். அதாவது, தங்களின் ஆதார் எண்ணில் இணைத்து அதன் பின் அந்த தங்கத்தை பயன்படுத்தலாம்.
நகையாக அல்லாமல் தங்க கட்டியாகவும் மற்றும் தங்க காசுகளாகாவும் வைத்திருப்பவர்கள், அதை வங்கியில் இருப்பு வைத்து ஆதார் எண்ணோடு இணைத்து, ஈட்டுறுதிப் பத்திரமாக மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.
இனிமேல் தங்கம் வாங்குபவர்களின் ஆதார் எண்ணை கண்டிப்பாக பெற வேண்டும். இல்லையேல் நகைக்கடை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், கறுப்புப் பணத்தை பதுக்குவது முடியாமல் போகும். முக்கியமாக தங்கத்தின் விலை 70 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும். அதேபோல், நில உடைமைதாரர் உரிமை புதுப்பிப்புத் திட்டம் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, நிலப்பத்திரங்கள் அனைத்தையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இதன் மூலம் நில மோசடி செய்வதும், பினாமியாக சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும்.
அதேபோல் வாகனம் உரிமை மீள்பதிவு திட்டம், அந்நிய பொருள் பண்டமாற்றுத் திட்டம் மற்றும் இந்திய நுண்ணோக்கு பாதுகாப்புத் திட்டம் என பல திட்டங்களை மத்திய அரசு அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கணக்கில் அல்லாமல் தங்கம், நிலம் வைத்திருப்பவர்களுக்கு கிடுக்கிப்பிடி போட மோடி அரசு தயாராகி வருகிறது.
