பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன? - நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்!
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று திங்கள்கிழமை ஒப்புதல் அளித்து வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதா என்றால் என்ன? ஏன் இது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது? வாருங்கள் விரிவாக இந்த பதிவில் காணலாம்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன?
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என்பது, அரசியலமைப்பு மசோதா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதா ஏற்கனவே ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஆனால் லோக்சபாவில் இன்னும் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. லோக்சபா மற்றும் மாநில சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இடஒதுக்கீடு இடங்களின் ஒதுக்கீடு, பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும்
சரி இந்த மசோதா குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 7 விஷயங்கள் என்னென்ன?
1. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கோருகிறது.
2. இந்த மசோதாவின்படி, SC மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அந்த குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் இவை சுழற்சி முறையில் மாற்றப்பட்டும்.
3. இந்த மசோதாவின்படி, திருத்தச் சட்டம் தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிறுத்தப்படும்.
4.இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள், பெண்களின் நிலையை மேம்படுத்த உறுதியான நடவடிக்கை அவசியம் என்றும், பஞ்சாயத்து அளவில் இடஒதுக்கீடு எப்படி கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது என்பதற்கான காரண ஆய்வுகளை மேற்கோள் காட்டுகின்றனர்.
5. அதே போல மசோதாவை எதிர்ப்பவர்கள், இந்த மசோதா, பெண்கள் சமத்துவமற்றவர்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் போட்டியிடுவதில்லை என்ற எண்ணத்தை இது உருவாக்குகின்றது என்று கூறுகின்றனர்.
6. ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதிகள் சுழற்சி முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் தொகுதியில் பணியாற்றுவதற்கான ஊக்கத்தை குறைக்கலாம் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்
7. இறுதியாக 1996ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆய்வு செய்த ஒரு அறிக்கை, OBCகளுக்கான இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டவுடன் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ராஜ்யசபா மற்றும் சட்ட மன்றங்களுக்கு இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் எதுவும் மசோதாவில் இணைக்கப்படவில்லை.