Asianet News Tamil

டெல்லியில் மோடிக்கு தடை! அதிரும் பி.ஜே.பி., அமர்க்களப்படுத்தும் எதிர்கட்சிகள்!

மோடி காலண்டருக்கு முதலில் டெல்லியில் ஏற்பட்டுள்ள  தடை குறித்த விவகாரம் அமித்ஷாவின் கவனத்துக்கு போய்விட்டது. ஆனால் இன்னமும் மோடியின் பார்வைக்கு அவர் கொண்டு செல்லவில்லையாம். தங்களின் எதிர்ப்புக்கு பி.ஜே.பி.யும், மத்திய அரசும் இப்படி பம்மி பதுங்குவதை கண்டு எதிர்கட்சிகள் ஏக சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.

Modi is banned in Delhi
Author
Delhi, First Published Dec 7, 2018, 3:42 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது பி.ஜே.பி. அரசு.  சரிந்து கிடக்கும் இந்தியாவை தூக்கி நிறுத்த வந்த மாய தேவனாக மோடியும் பார்க்கப்பட்டார். மக்களின் அந்த எதிர்பார்ப்பு பலித்ததா இல்லையா என்பதற்குள் நாம் இந்த நேரத்தில் போக வேண்டிய அவசியமில்லை. ஆனால் சர்வதேசமெங்கும் வல்லமை மிக்க ஒரு தலைவராக பார்க்கப்படுகிறார் மோடி. இதுவரையில் எந்த இந்திய பிரதமரும் பெற்றிடாத ஒரு பப்ளிசிட்டியை அகில உலகிலும் பெற்று வைத்துள்ளார் அவர். 

ஆனால் எல்லாவற்றையும் விட காலம் பெரிதல்லவா! அம்மாம் பெரிய மோடிக்கும் ஐந்து வருட காலம்தானே அதிகாரம். மீண்டும் வரவேண்டுமென்றால், தேர்தலில் மீண்டு வரவேண்டுமல்லவா? இதோ அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிர்வுகள், ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. இந்நிலையில் வழக்கமாக ஆளும் அரசுக்கு எதிரான மன ஓட்டம் தேசமெங்கும் இருந்து கிளம்ப துவங்கியுள்ளன. வழக்கத்தை விட மிக பவர்ஃபுல்லாம எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி நிற்பதால் பி.ஜே.பி.  ஒரு வித மிரட்சியுடன் தான் இருக்கிறது. 

இந்நிலையில் மோடிக்கு தடை! எனும் தகவல்தான் தலைசுற்ற வைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு புது வருட பிறப்பின் போதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் போட்டோவுடன் புதிய காலண்டர்கள் தரப்படுவது, அவை மாட்டப்படுவதும் வழக்கம். 2019-க்கான காலண்டரானது பிரதமர் மோடி படத்துடன் அச்சிடப்பட்டுவிட்டது. இதை நாடெங்கும் அனுப்பும் முன்பாக முதலில் டெல்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு விநியோகிக்கும் முயற்சியில் அதற்குரிய அதிகாரிகள் முனைப்பு காட்டினர். 

இதை ஸ்மெல் செய்துவிட்ட எதிர்கட்சிகள் மிக கடுமையாக எதிர்க்க துவங்கியுள்ளன. புதிய வருடம் பிறந்த இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் துவங்கிவிடும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அப்போது பிரதமர் எனும் பெயரில் மோடியின் புகைப்படம் மத்தியரசு அலுவலகங்களில் தொங்கிக் கொண்டிருப்பது தவறு! என்று தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குதிக்க துவங்கிவிட்டனர். 

எங்களை மீறி மோடி காலண்டரை கொடுத்து அதை தொங்கவிட்டால் எங்களின் கோபம் எல்லை தாண்டும்.’ என்று பகிரங்கமாக சவால் விட்டுள்ளது நாயுடு கட்சி, இதற்கு மம்தா கூட்டம் பெரும் ஆதரவு காட்டியுள்ளது. ‘ஒரு காலண்டருக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா?’ என்று தலையிலடிக்கும் பி.ஜே.பி., ‘ஏன் உங்கள் ஆட்சி இருக்கையில் மன்மோகன் படத்தைப் போட்டுதானே ஆட்சியின் கடைசி ஆண்டிலும் காலண்டர் அடித்தீர்கள்?’ என்று காங்கிரஸை உரச, அவர்களிடம் பதிலில்லை. 

இந்நிலையில் வெளியில் இதை சாதாரண விஷயம் போல ட்ரீட் செய்து கொண்டாலும் கூட உள்ளுக்குள் பொங்குகிறாரார்களாம் பி.ஜே.பி.யின் முக்கிய புள்ளிகள். காரணம்?...தலைநகரிலேயே பிரதமர் மோடிக்கு எதிரான இப்படியொரு அலை உருவாகிவிட்டதென்றால் நாடெங்கும் எதிர்ப்புகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது. இது தேர்தல் நேரத்தில், மத்திய அரசு அதிகாரிகள் நமக்கு எதிராக பணி புரியவும், நாம்  பெரும் பின்னடைவை சந்திக்கவுமான சூழல்களை ஏற்படுத்திட  முதற்புள்ளியாக இது அமைந்திடுமோ? என்று நோகிறார்களாம். 

இதற்கிடையில், மோடி காலண்டருக்கு முதலில் டெல்லியில் ஏற்பட்டுள்ள  தடை குறித்த விவகாரம் அமித்ஷாவின் கவனத்துக்கு போய்விட்டது. ஆனால் இன்னமும் மோடியின் பார்வைக்கு அவர் கொண்டு செல்லவில்லையாம். தங்களின் எதிர்ப்புக்கு பி.ஜே.பி.யும், மத்திய அரசும் இப்படி பம்மி பதுங்குவதை கண்டு எதிர்கட்சிகள் ஏக சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios