நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அவைக்கு வர வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்தார். இதையடுத்து எதிர்கட்சியினர் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்தும், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்டப்டது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையிலும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.