உத்திர பிதேச மாநிலம் ஆக்ராவில் அவைருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
கான்பூர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

பாஜக அரசு அளித்த உறுதி மொழிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்த அவர்,
வருகிற 2022க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் முதல் பழங்குடியினர் வரை அனைவருக்கும் வீடுகள் கட்டி தரப்படும் என்றும், குடிசை பகுதி மக்களுக்கு இந்த வீடு வழங்கும் திட்டம் சமர்ப்பணம் என்றும் மோடி தெரிவித்தார்.
