Asianet News TamilAsianet News Tamil

மோடி ஹெலிகாப்டரில் கைவைத்த அதிகாரி... தூக்கியடித்தது தேர்தல் ஆணையம்!

இந்தச் சோதனையை பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். ஆனாலும், பறக்கும் படையினர் அதையும் மீறி சோதனை செய்தனர். இதனை அடுத்து தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி புகார் அளித்தார். இது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. 

Modi helicopter checked by Election official
Author
Odisha, First Published Apr 18, 2019, 6:54 AM IST

பிரதமர்  நரேந்திர மோடி பயணிக்கும் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி, பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். 
 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதி இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் ஒடிசாவில் இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை செய்தனர்.Modi helicopter checked by Election official
இந்தச் சோதனையை பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்தனர். ஆனாலும், பறக்கும் படையினர் அதையும் மீறி சோதனை செய்தனர். இதனை அடுத்து தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி புகார் அளித்தார். இது பற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பின்னர் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி செயல்படாதது தெரியவந்தது. இதனையடுத்து சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சினை தேர்தல் ஆணையம் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Modi helicopter checked by Election official
சிறப்பு பாதுகாப்பு படை பிரிவைப் பெற்றுள்ளவர்களுக்கு இதுபோன்ற சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிமுறையை மீறி பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதால் மொஹ்சின் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios