Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகள் மீது மானாவாரிய பாசம் வைத்துள்ள மோடி! கட்டிப் பிடிச்சு கண்ணீர்விட்டு கதறியழுத சம்பவம்..!

விவசாயிகளை நாங்கள் உணவளிப்பவர்களாக பார்க்கிறோம். ஆனால் காங்கிரஸ் அரசோ  வெறும் ஓட்டு வங்கியாகவே அவரக்ளை கருதியது!: மோடி. (ஆமா தல! கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நீங்க ஒவ்வொரு வீடா தேடி வந்து, கட்டிப்பிடிச்சு கண்ணீர்விட்டு கதறியழுது, கை நிறைய நிவாரணப் பணத்தை அள்ளியள்ளி கொடுத்ததை பார்த்தப்பவே எங்களுக்குப் புரிஞ்சு போச்சு. அதை, உங்க வாயால வேற விளக்கணுமாய்யா?)

Modi has a fondness for farmers
Author
Delhi, First Published Jan 6, 2019, 3:15 PM IST

* விவசாயிகளை நாங்கள் உணவளிப்பவர்களாக பார்க்கிறோம். ஆனால் காங்கிரஸ் அரசோ  வெறும் ஓட்டு வங்கியாகவே அவரக்ளை கருதியது!: மோடி.
(ஆமா தல! கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நீங்க ஒவ்வொரு வீடா தேடி வந்து, கட்டிப்பிடிச்சு கண்ணீர்விட்டு கதறியழுது, கை நிறைய நிவாரணப் பணத்தை அள்ளியள்ளி கொடுத்ததை பார்த்தப்பவே எங்களுக்குப் புரிஞ்சு போச்சு. அதை, உங்க வாயால வேற விளக்கணுமாய்யா?)

* சபரிமலை சன்னிதானத்தினுள் செல்ல போலீஸ் எங்களைப் பயன்படுத்தவில்லை. நாங்கள்தான் போலீஸை பயன்படுத்தினோம். நான் இதற்கு முன்பே சில மாவோயிஸ்ட் ஆதரவு இயக்கங்களில் செயல்பட்டு வந்துள்ளேன்!: பிந்து (க்கும்! இனி யாராச்சும் சொல்லுவீங்க, ‘வெறும் விளம்பரத்துக்குத்தான் அந்த ரெண்டு பொம்பளைங்களும் சாமி கும்பிட போனாங்க!’ அப்படின்னு. எவ்வளவு பெரிய பக்தாள் பாருங்க ரெண்டு பேரும்.)

* மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பனிரெண்டு தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினால்தான் கூட்டணி! என்று காங்கிரஸை குமாரசாமி நிர்பந்தித்துள்ளார்: செய்தி. (அதெல்லாம் இருக்கட்டும். தல, நீங்க நின்னுட்டு இருக்கிற முதலமைச்சர் நாற்காலியே அவங்க முட்டுக் கொடுத்து இருக்கிறதாலேதான் ஆடாம இருக்குதுங்கிறது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா! இதான் டவுட்டு. )

* தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், தொழிலதிபர் விஜய் மல்லையாவை மும்பை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது: செய்தி. 
(ஆஹா, என்ன ஒரு அதிரடி ஆக்‌ஷன்! மல்லையா முந்தா நாள்தான் இந்தியாவுல இருந்து தப்பிச்சு ஓடினா, நேத்து காலையிலதான் மோடியோட அரசாங்கம் அமைஞ்சுது, நேத்து மத்தியானமே இப்படியொரு தீர்ப்பு வந்துடுச்சே! மோடி அரசு, மேஜிக் அரசுதான் போங்கோ!)

* அ.தி.மு.க.வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லையே! தாமதமாகிறதே! என்று கேட்கிறார்கள். அந்த கடசியின் வேட்பாளரை நாங்கள் அறிவிக்க முடியாது. அவர்கள்தான் அறிவிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின். (இந்த சிங்கார சென்னையிலேயே , இவ்வளவு ஏன் இந்த வேர்ல்டுலேயே இப்படியொரு பதிலை எந்த தலைவனாலேயும் சொல்ல முடியாது! இந்த பதிலை கல்வெட்டா வெட்டி, தஞ்சாவூர் கோயில்ல வைக்கணும் தளபதி. பின்னால் வரும் இளைஞர்களுக்கு இது அரசியல் அறிவை நெய் ஊத்தி வளர்க்குமுங்கோவ்!)

Follow Us:
Download App:
  • android
  • ios