Breaking: குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்! தேர்தலுக்கு முன் மோடி அரசின் அதிரடி அறிவிப்பு!
தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக மத்திந அரசு அறிவித்தது. அதன்படி அந்தச் சட்டத்தின் விதிகளை வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அந்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறது. அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் விதிகளையும் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வெளியேறிய முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுக்கும் இந்தச் சட்டம் டிசம்பர் 2019 இல் நாடாளுமன்றத்த்தில் நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டம் 1955 இல் திருத்தம் செய்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியின் ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மாத கால போராட்டத்தை நடத்தினர். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்டத்திற்குப் பின் இச்சட்டம் அமல்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி! DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
சிஏஏ மூலம் பயன் அடைவது யார்?
இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே இந்தச் சட்டம் உருவாக்கப்படுகிறது என்று கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய 6 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேற குடியுரிமை பெற முடியும்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் இந்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காகனது அல்ல என்றும் உள்துறை அமைச்சர் விளக்கியிருந்தார்.
மகளுக்கு வாரி வழங்கும் அம்பானி! ஈஷா அம்பானியின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
காங்கிரஸ் எதிர்ப்பு:
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை அறிவித்துள்ளதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "சிஏஏ விதிகளை அறிவிப்பதை ஒன்பது முறை ஒத்திவைத்த பாஜக அரசுக்கு, தேர்தலுக்கு முன் தான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது. தேர்தல்களை துருவப்படுத்தவே இப்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் அசாமில்" என்று கூறியுள்ளார்.
"தனது அரசு தொழில் நேர்த்தியுடனும் ரீதியாகவும், கால வரையறைகளுக்கு உட்பட்டும் செயல்படுவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், சிஏஏ விதிகளை அறிவிக்க எடுத்துக்கொண்ட நேரம் பிரதமரின் அப்பட்டமான பொய்களுக்கு மற்றொரு நிரூபணம்" என்றும் ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.