கடந்த நவ 8 பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு வெளியிட்டார். அது பொதுமக்கள் வாழ்க்கையில் பெரிய துன்பங்கள் தொல்லைகள் ஏற்பட்டது. சரியாக இரண்டு மாதம் கழித்து ஜனவரி 8 ல் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பணம் கொடுத்தால் தான் பெட்ரோல் டீசல் என்று முடிவெடுத்துள்ளது பெரிய புயலை கிளப்பி உள்ளது.

பண மதிப்பிழப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது சாதாரண மக்களே கருப்பு பணத்தை ஒழிப்பேன் என சவடால் காட்டியவர்கள் ஒரு ரூபாய் கூட கருப்பு பணத்தை அழிக்க முடியவில்லை. 

காரணம் அனைத்து கருப்பு பணமும் வங்கி அதிகாரிகள் , மோசடி ஆட்களால் வெள்ளையாக்கப்பட்டு வங்கிக்குள் வெள்ளை பணமாக வந்துவிட்டது. இதனால் மத்திய அரசு தடுமாறி நிற்கிறது. 

இதனால் டாபிக்கை மாற்றி பணமில்லா பரிவர்த்தனை என்றார்கள். ஆனால் பணமே இல்லாத பரிவர்த்தனைத்தான் நாடுமுழுதும் நடக்கிறது. சாதாரண தேவைகளுக்கு கூட பணம் இல்லாத நிலையில் சாதாரண மக்கள் வாடி வருகின்றனர்.

வேறு வழியில்லாமல் கிரெடிட் , டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்கின்றனர். பெட்ரோல் போடுவது முதல் அனைத்து அத்யாவசிய தேவைகளுக்கும் கார்டுகளை பயன் படுத்துகின்றனர். பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்கான ரூபாய் தாள்களை புழக்கத்தில் விட இதுவரை மத்திய அரசால் இயல வில்லை .

500 ரூபாய் புதிய நோட்டு வந்தது எனபதை செய்தியில் பார்த்து 2 மாதம் ஆகிறது. ஆனால் யாராவது பொதுமக்கள் கையில் 500 ரூபாய் நோட்டை பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை வைக்கும் இல்லத்தரசி ஒருவர் 2000 ரூபாய்க்கு சில்லறை என்றால் 500 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் எப்படி 100 ரூபாய் தாள்களாக கடைக்காரர்கள் சில்லறை தருவார்கள். இது என்ன அரசாங்கமா அல்லது கோமாளிகள் கூடாரமா? என்று ஆக்ரோஷமாக கூறினார்.

பணமில்லா பரிவர்த்தனை என்று கூறும் மோடி அரசு அதற்கு ஏற்ற வகையில் வசதிகளை செய்து தரணும். ஆனால் தற்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோபத்திற்கும் அவர்கள் பாதிப்புக்கும் நியாயமான காரணம் உள்ளது. 

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு பொதுமக்கள் தலையில் தானே விழுகிறது. பணமில்லா பரிவர்த்தனை , பணமே இல்லாமல் மாறிப்போன பரிவர்த்தனையாக மாறிப்போன பின்னர் இப்போது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பால் அனைத்து இயக்கங்களும் முடங்கித்தான் போகும் . 

பணம் தட்டுப்பாடு உள்ள நிலையில் எங்கிருந்து பெட்ரோல் டீசல் போடுவது இதில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக தலையிடவேண்டும் என பொதுமக்கள் கொந்தளிப்புடன் கூறினர். மக்கள் போராட்டம் வெடிக்கும் முன்னர் மத்திய அரசு விழித்து கொள்ளுமா ???