modi demands teresa may to handover mallaya

இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு பிரிட்டன் தப்பி வந்துள்ள அனைவரையும் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் தெரசா மேவிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். 

முக்கியமாக லலித் மோடி , விஜய் மல்லையா போன்றோரை விரைந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி.20 மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்

இன்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி, நார்வே பிரதமர் எர்னா சால்பர்க், தென்கொரிய பிரதமர் மூன் ஜே-இன் ஆகியோரை சந்தித்தார்.



இந்த சந்திப்பில் இந்தியாவுடனான நட்புறவு, எதிர்கால திட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் ஆகியன குறித்து விவாதித்தார். இத்தாலி மற்றும் நார்வேயுடன் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனிடையே இந்திலாந்து பிரதமர் தெரசா மேவை சந்தித்த மோடி, இந்தியாவில் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு பிரிட்டன் தப்பி வந்துள்ள அனைவரையும் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முக்கியமாக லலித் மோடி , விஜய் மல்லையா போன்றோரை விரைந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்..